;
Athirady Tamil News

அமெரிக்கர்களின் எலும்புகளை பதுக்கி வைக்கும் வட கொரியர்கள்: சுவாரஸ்ய பின்னணி..!!

0

கொரிய யுத்தத்தின்போது இறந்த அமெரிக்கர்களின் எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த சீருடைகள், பூட்ஸ்கள் அகியவற்றைத் தோண்டி எடுத்து பதுக்கி வருகிறார்கள் வட கொரியர்கள்.

அமெரிக்கர்கள் எப்போதுமே தங்கள் நாட்டவர்களின் எச்சங்களை தேடும் குணம் கொண்டவர்கள்.அதுமட்டுமின்றி கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எலும்புகள் உட்பட்ட எச்சங்களை அமெரிக்கா விரைவில் வட கொரியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் என நம்புவதாக அமெரிக்காவின் Secretary of State Mike Pompeo தெரிவித்ததோடு தாங்கள் இன்னும் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்

மேலும் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் அமெரிக்கர்களின் உடல் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயத்த நடவடிக்கையாக 100 மர சவப்பெட்டிகளை கொரிய எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

கொரிய யுத்தத்தில் பங்கேற்ற சுமார் 7,700 அமெரிக்க வீரர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை, அதேபோல் 5,300பேர் வட கொரியாவில் காணாமல் போனார்கள்

இந்நிலையில் சீருடை போன்ற சில அடையாளங்களுடன் கிடைக்கும் அமெரிக்க உடல் ஒன்றிற்கு சீன புரோக்கர்கள் 1000 டொலர்கள் வரை கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம் டிரம்ப் சந்திப்பிற்குப்பின் சுமார் 200 அமெரிக்க வீரர்களின் உடல்களை திருப்பிக் கொடுப்பதாக வட கொரியா உறுதியளித்துள்ளது.

ஆனால் உண்மையில் வட கொரியர்கள் பலர் ஏராளமான உடல்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே வட கொரியர்கள் அமெரிக்க வீரர்களின் உடல்களை திருப்பிக் கொடுத்து பெரிய தொகைகளைப் பெற காத்திருக்கிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*