;
Athirady Tamil News

ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்த கணவன்: சாமர்த்தியமாக கண்டுப்பிடித்த மனைவி..!!

0

பிரித்தானியாவை சேர்ந்த பெண் தனது கணவர் வேறு பெண்ணை ரகசிய திருமணம் செய்ததை சாமர்த்தியமாக கண்டுப்பிடித்துள்ளார்.

ஜிப்னி என்ற பெண்ணும், மவுரீஸ் என்ற ஆணும் கடந்த 1995-ஆம் ஆண்டு ஒரு இரவு விடுதியில் சந்தித்து கொண்ட நிலையில் நட்பாகியுள்ளனர்.

நட்பானது பின்னர் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த 2011-ஆம் ஆண்டு வரை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ஜிப்னி, மவுரீஸ் திருமண வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.

2011-ல் ஓமனுக்கு வேலை விடயமாக மவுரீஸ் சென்ற நிலையில் அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது

அதாவது மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்த ஜிப்பி ஓமனுக்கு சென்ற பின்னர் அவருடன் பேசுவதை குறைத்து கொண்டார்.

இதையடுத்து கணவர் ஏதோ தவறு செய்கிறார் என்பதை உணர்ந்த ஜிப்னி இது குறித்து மவுரீஸிடம் கேட்க அவர் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்.

பின்னர் 2012 ஜனவரி மாதம் பிரித்தானியாவுக்கு மவுரீஸ் வந்த நிலையில் மனைவியுடன் சண்டை ஏற்பட்டு அவரை பிரிந்து சென்றுள்ளார்.

இதையடுத்து மவுரீஸ் தங்கியிருந்த வீட்டின் போன் நம்பரை கண்டுப்பிடித்த ஜிப்னி அங்கு போன் செய்ய எதிர்முனையில் பெண்ணொருவர் போனை எடுத்துள்ளார்.

அவரிடம் தான் மவுரீஸின் மனைவி என கூறி எதிர்முனையில் இருந்த பெண் மவுனமாக இருந்துள்ளார்.

பின்னர் போன் கட் ஆனது, இதையடுத்து கணவரின் பேஸ்புக் பக்கத்தை ஜிப்னி பார்த்த நிலையில் அதில் அவரின் நண்பராக இருந்த பெண் மவுரீஸுடன் திருமண உடையில் இருந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து ஜிப்னி அதிர்ந்த நிலையில், தனது கணவருக்கு அப்பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய ஜிப்னி மவுரீஸுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார்.

ஜிப்னி வாழ்வில் நடந்த இந்த விடயத்தை தற்போது தான் அவர் மனம் திறந்து வெளியில் கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 1 =

*