;
Athirady Tamil News

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞன் தற்கொலை..!!

0

தென்மராட்சி பகுதியில் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன் என்ற 29 வயதுடைய இளைஞனே நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞரின் கடிதமொன்று காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த கடிதத்தில் ‘பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தனது குடும்பத்துக்கு தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும் படித்தும் வேலை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*