;
Athirady Tamil News

கைதடிப் பாலம் மக்களின் பாவனைக்காகத் திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

யப்பானிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடிப் பாலம் மக்கள் பாவனைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை (A9) வீதியில் கைதடிப் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலத்திற்கு மாற்றீடாக அமைக்கப்பட்ட கொங்கரீட் பாலமே இவ்வாறு இன்று திறந்துவிடப்பட்டது.

பாலத்தில் நடந்த பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் ஒப்பந்த நிறுவனத்தினரும் இணைந்து மக்களின் பாவனைக்காக இதனைத் திறந்து வைத்துள்ளனர்.

எனினும் 10 ஆம் திகதி பலாலிக்கு வரவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இப்பாலம் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இப் பாலத்துடன் அமைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பாதைக்கான சமிக்ஞை குறியீடுகள் யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 14 =

*