;
Athirady Tamil News

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் அமெரிக்க ஊடகம்..!!

0

நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை தொடர்பாக இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு, குறித்த ஊடக நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான நியூயோர்க் டைம்ஸின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு இலங்கை ஊடகவியலாளர்கள் பங்களிப்பு செலுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் ஊடக சந்திப்பில் விமர்சித்திருந்தனர்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்த நடவடிக்கை விமர்சகர்களை அமைதிபடுத்தும் மற்றும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.

இதேவேளை, எமது நிறுவனத்திற்கும், ஏனைய ஊடக நிறுவனங்களுக்காகவும் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிபடுத்துவது அவசியம்” என்றும் குறித்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + six =

*