;
Athirady Tamil News

பாடகி எஸ்.ஜானகி: வதந்திகளுக்கு நடவடிக்கை..!!

0

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் (ஜூலை 1) புகார் அளித்துள்ளனர்.

அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்தெட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்திரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து கவுரவ முனைவர் பட்டம், தமிழ்நாடு அரசின் கலைமாமணி பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தையே படைத்தவர் பாடகி எஸ்.ஜானகி. அவருக்குத் தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்துவருகிறார்.

3 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். அதன் பிறகு அவரது உடல் நிலைகுறித்து வதந்திகள் பரவியன. கடந்த வாரம் 3ஆவது முறையாக அவரது உடல்நிலை பற்றிய வதந்தி பரப்பப்பட்டது. ‘‘நான் நலமாக இருக்கிறேன். எனது உடல் நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்’’ என்று எஸ்.ஜானகி வேண்டுகோள் விடுத்து வீடியோவில் பேசி வெளியிட்டார்.

எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கத்தினர் கேரள போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்யும்படி சைபர் கிரைம் போலீஸுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டுள்ளார்.

சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி தமிழ் நாட்டில் இருந்து பரவியதா, அல்லது ஆந்திரா, கேரளாவிலிருந்து பரப்பப்பட்டதா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − thirteen =

*