;
Athirady Tamil News

விடத்தல்தீவு பாடசாலையில் காணப்பட்ட தேனீக்கூடுகள் முழுமையாக அழிப்பு..!! (படங்கள்)

0

மன்னார் விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் பாடசாலையில் காணப்பட்ட 26 தேனீக்கூடுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் முயற்சியினால் நேற்று (திங்கட்கிழமை) இரவு முதல் இன்று அதிகாலை வரை யாழ் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் குறித்த 26 குளவிக்கூடுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் மற்றும் பெருக்கம் அதிகரித்த நிலையில் பாடசாலைக் கட்டடங்களில் சுமார் 26 குளவிக்கூடுகள் காணப்பட்டுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக குளவிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தனர்.

மேலும் இதுவரை 8 மாணவர்கள் குளவிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு, ஒரு மாணவனுக்கு 95 குளவிகள் கொட்டிய நிலையும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மடு கல்விப்பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 18 =

*