;
Athirady Tamil News

விஜயகலாவை பதவி விலக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரியுள்ளார்..!!

0

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரியுள்ளார். வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என, யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஷ்வரன் நேற்று வெளியிட்ட கருத்து நாடு முழுவதிலும் ஏற்படுத்திய அதிர்வுகள், இன்று பாராளுமன்றிலும் ஒலித்தது.

இந்த நிலையில், பிரதி அமைச்சர் மீது முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + seven =

*