;
Athirady Tamil News

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்..!!

0

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் டெரென்ஸ்டி ஜோன்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பொறுப்பு கூறல் விடயம் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் டெரென்ஸ்டி ஜோன்ஸுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − four =

*