;
Athirady Tamil News

வவுனியாவில் சிதைந்த நிலையில் இரு யானைகளின் எச்சங்கள் மீட்பு..!! (படங்கள்)

0

வவுனியா கள்ளிகுளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்பை அண்டிய காட்டு பகுதியிலிருந்து இரண்டு யானைகள் உயிரிழந்து அழுகிய நிலையில் அதன் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் யானைகள் ஒரு மாதத்திற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள யானைகள் அடிக்கடி கிராமத்திற்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதும் வழமையான ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (04) காலை காட்டுப்பகுதிக்கு சென்ற கிராமவாசி ஒருவர் வெட்டப்பட்ட குழி ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்து சென்று பார்த்தபோது அக்குழிக்குள் இரு யானைகள் உயிரிழந்து அதன் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, இரு யானைகளும் குழியில் விழுந்தமையால் உயிரிழந்துள்ளதா? அல்லது தந்தங்களை பெறும் நோக்கோடு கொல்லப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 2 =

*