;
Athirady Tamil News

வடக்கிற்கு தனியான சட்டமா?: ஞானசார தேரர் ஆவேசம்..!!

0

நாட்டுக்குள் அனைவருக்கும் பொதுவானதொரு சட்டமே காணப்படவேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டே ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சபையின் மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் விஜயகலாவின் நேற்றைய உரை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் விஜயகலாவின் பேச்சுத் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவாகச் செயற்பட வேண்டும்.

கண்டியில் தெல்தெனிய இளைஞர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இன்று விஜயகலாவிற்கும் பொருந்தும். எனவே இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டமே காணப்படவேண்டும். நாட்டினது பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் அக்கறையுடன் செயற்படவேண்டும். நாட்டிற்குள் இருவேறு சட்டங்களுக்கு இடமளிக்கக முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*