;
Athirady Tamil News

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது..!!

0

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிறிவிற்கு உட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்போபுர பொலிஸார் நடத்திய விஷேடதேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சட்ட விரோத அகழ்வில் 7 நபர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களில் மூவர் தப்பிச்சென்றதாகவும் அவர்கள் தேடும் பணி தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களாக அவர்கள் 30 அடிவரை அகழ்ந்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 16 =

*