;
Athirady Tamil News

அமைச்சு பதவி விலகல் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை! மறுக்கும் விஜயகலா..!!

0

அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு தனக்கு எந்தவொரு அறிவித்தலும் வரவில்லை என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.

அமைச்சரின் கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், அவரை பதவி விலக்குவது தொடர்பான செய்தி நேற்று வெளியாகி இருந்தது.

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உரிய விசாரணை நிறைவடையும் வரை விஜயகலாவின் இராஜாங்க அமைச்சு பதவியை தற்காலிமாக நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இவ்வாறான நிலையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்த இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயகே விஜயகாலவுடன் நேரடி உரையாடல் காணொளி..!! (வீடியோ)

வாய் தவறி அவ்வாறு சொல்லி விட்டேன்: ஊடகவியலாளர் முன் அழுதார் விஜயகலா..!!

வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்- விஜயகலா..!! (வீடியோ)

விஜயகலாவை பதவி விலக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரியுள்ளார்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*