;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (04.07.2018)

0

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பில் விசாரிக்கப்படும்..!!

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க செய்த முறைப்பாடு சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி இது சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பயணிகள் பாதிக்கும் வகையில் செயற்படுவதில்லை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை தரும் பகுதியில் குடிவரவு, குடியகல்வு கருமபீடத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தியை மறுப்பதாகவும், ஒருபோதும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை என்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார்.

பயணிகள் வருகை தரும் கருமபீடத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகிய செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒருசில விமானங்கள் ஒரே நேரத்தில் வரும் போது சற்று நெரிசல் நிலை ஏற்படுவதாகவும், எனினும் நிலமையை கையாள்வதற்கு தேவையான அதிகாரிகள் இணைக்கப்படுவதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார்.

கல்வியமைச்சுக்கு முன்னால் பதற்ற நிலை

கல்வித் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் சில இணைந்து பெலவத்தை, இசுருபாய பிரதேசத்தில் கல்வியமைச்சுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் சற்று குழப்பநிலை எற்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதனை கட்டுப்படுத்த சென்ற பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்னார்.

இதன் காரணமாக பொரள்ளை – கொட்டவ பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட துறைசார்ந்த பல அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

யாழ் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று (04) முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஆவா குழுவின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − one =

*