;
Athirady Tamil News

வவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை..!! (படங்கள்)

0

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் ( நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து உலகசாதனை படைத்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.

அந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.
க.கணேஸ்வரன் 28-02-2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன், மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினார் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் நேற்றையதினம் (03) கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனையாளன் க.கணேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்
உலகசாதனை செய்யவேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியுள்ளது. எமது இளைஞர்கள் இவ்வாறான சாதனைகளை புரிய முன்வரவேண்டும் அத்துடன் திறமையும், முயற்சியுமுள்ள இளைஞர்களுக்கு எமது சமூகம் ஆதரவு வழங்கவேண்டும். கின்னஸ் சாதனை புரிவதற்கு பணம் தேவையில்லை திறமையிருந்தால் எவராலும் சாதனை படைக்க முடியும் என குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fourteen =

*