;
Athirady Tamil News

பிரபல நடிகர் மகன் மீது பாலியல் வழக்கு..!!

0

நடிகையைப் பாலியல் வன்கொடுமை செய்து, கருவைக் கலைத்ததாக நடிகர் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் முன்னணி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் மகன் மகாக்ஷய். நடிகரான இவர் மீது, இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. அவர் தனது மனுவில் கூறியதாவது, “திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மகாக்ஷய் என்னுடன் 4 ஆண்டுகள் பழகினார். நாங்கள் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். ஏதோ மருந்து கொடுத்து என் கருவை கலைத்தார். திருமண ஆசை காட்டி ஏமாற்றி என்னை வன்புணர்வு செய்த மகாக்ஷய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்குப் பயந்து நான் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தேன். மகாக்ஷய்யும் தனது தாயுடன் சேர்ந்து என்னை மிரட்டினார்” என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏக்கா குப்த்தா, மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கைப் பொறுத்தவரையில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால் எஃப் ஐ ஆர் பதிவு செய்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிரபல நடிகரின் மகன் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + eighteen =

*