;
Athirady Tamil News

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருட்கள் பறிமுதல்..!!

0

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்கள் இலங்கை சுங்க பிரிவால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.

2945 கிராம் ஹஷீஸ், 2000 கிராம் கஞ்சா, 220 போத்தல் விஸ்கி, 225 போத்தல் வைன் மற்றும் 100 கேன் பியரே இவ்வாறு இலங்கை சுங்க பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இப்போதைப்பொருட்களும் வெளிநாட்டு மதுபானங்களும் உள்ளடங்கிய கொள்கலன் ஒன்று ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என்று இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + three =

*