அந்தமானில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 என பதிவு..!!

வங்கக் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களான அந்தமான் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியானது.
அந்தமான் பகுதியில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.