;
Athirady Tamil News

சுமார் 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது..!!

0

வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்திச்சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கிரிபத்கொடை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பலில் வேலைவாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 19 பேரிடம் இருந்து 39 இலட்சத்து 97 ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை சந்தேக நபர்கள் பெற்றுக்ககொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கன மற்றும் மாவனெல்ல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (05) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 1 =

*