;
Athirady Tamil News

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம்..!!

0

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரசபையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டிருந்தது. இதன்போது பல பெறுமதியான பொருட்கள் குறைந்த விலையில் ஏலத்தில் விற்பனையாகியிருந்தது. எனினும் ஏலம் இடம்பெற்றபோது ஒரு தொகுதி பெறுமதி வாய்ந்த மரங்கள் ஏலம் இடம்பெறும் பிரதேசத்தில் இருந்து ஓரமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் பெற வந்த பலரும் குறித்த மரங்கள் ஏலத்தில் போடப்படுமா என கேட்டபோது ஏலத்தில் ஈடுபட்ட நகரசபை உத்தியோகத்தர்கள் சிலர் அது ஏலத்திற்கு போடப்படாது என தெரிவித்து மிகவும் பழுதடைந்த மரங்களை ஏலத்தில் விற்பனை செய்திருந்தனர்.

எனினும் அன்றைய தினம் இரவு 9.09 மணிக்கு நகரசபையினுள் வந்த உத்தியோகத்தர்கள் இருவர் ஏலத்தில் பெற்ற மரங்களுடன் இணைந்து ஏலம் போடப்படாத பெறுமதி மிக்க மரங்ளையும் ஏற்றிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் வவுனியா நகரசபை வாயிலில் காவல் கடமையில் இருந்த காவலாளி குறித்த மரங்கள் மோசடியான முறையில் 41-5470 இலக்க வாகனத்தில் ஏற்றிச் சென்றதை பதிவு செய்திருந்தார். இவ்வாறு இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்தியமையால் நகரசபையின் செயற்பாட்டால் தாம் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட காவலாளி தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 2 =

*