;
Athirady Tamil News

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், மக்களிடம் கையளிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், சிறுவர் பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வடமாகணசபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா கல்நாட்டினகுளத்தில் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இயற்கை சுற்றலாத்தினையும் சிறுவர் பூங்காவினையும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் பிரதேசசபை உறப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + nineteen =

*