;
Athirady Tamil News

தேசிய கீதத்தை அவமதித்த ஜம்மு காஷ்மீர் மாணவர்கள்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்தனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் மட்டும் எழுந்து நிற்காமல் தங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வீடியோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இதேபோன்று கடந்த நவம்பர் மாதம் ரஜோரியில் உள்ள பாபா குலாம் ஷா பத்ஷா பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர், தேசிய கீதத்தை அவமதித்தனர். கொச்சியில் மார்ச் மாதம் ஒரு மாணவர் தேசிய கீதத்தை அவமதித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + two =

*