;
Athirady Tamil News

பிரித்தானியாவில் உறவினரை கொன்று சடலத்தை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்ற நபர்..!!

0

பிரித்தானியாவில் சகோதரியின் கணவரை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் குடியிருக்கும் 41 வயதான சுக்வீந்தர் சிங் என்பவரே, தமது சகோதரி கணவரை கொலை செய்து சடலத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றவர்.

மனச்சிதைவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் சுக்வீந்தர் சிங். உரிய கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற உறுதியின்பேரில் குறித்த நபரை அதிகாரிகள் பிரித்தானியாவுக்குள் அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமது சகோதரியின் கணவரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

தமது மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் வலுத்ததை அடுத்தே சுக்வீந்தர் சிங், தமது சகோதரியின் கணவரை கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து சடலத்தை மேற்கு Bromwich பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்கு தமது காரிலேயே எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளார்.

பின்னர் தாமும் சரணடைந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சுக்வீந்தருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மட்டுமின்றி தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் சுக்வீந்தரை இந்தியாவுக்கு நாடுகடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*