;
Athirady Tamil News

காரில் சென்று கொண்டிருந்த போது வைப்பரில் ஒளிந்திருந்த பாம்பு: அதிர்ச்சியில் உறைந்து போன ஓட்டுனர் வீடியோ..!!

0

அமெரிக்காவில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரின் வைப்பரிலிருந்து திடீரென்று பாம்பு ஒன்று வந்ததால், ஓட்டுனர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசானா மாகாணத்தைச் சேர்ந்த Layrd Mahler என்ற நபர் பினிக்ஸ் பகுதிக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துச் சென்றுள்ளார்.

காரில் சென்று கொண்டிருந்த போது வைப்பரை பயன்படுத்தியுள்ளார். அப்போது வைப்பரில் மறைந்திருந்த பாம்பு ஒன்று ஒரு வித ஆக்ரோசத்துடன் உஷ் என்ற நிலையில் வெளியில் வந்துள்ளது

அந்த வைப்பரில் சிக்கிக் கொண்டு அங்கும், இங்கும் தலையை ஆட்டியுள்ளது.இதைக் கண்டு பீதியடைந்த Layrd Mahler குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தியவுடன் காரின் வைப்பரை பார்த்துள்ளார். ஆனால் பாம்பு இருப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருந்துள்ளது

இதனால் அவர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பாம்பை பிடித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான காட்சியை Layrd Mahler தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

காரை பயன்படுத்தும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கையான தகவல் என்று இந்த வீடியோ பார்க்கும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*