;
Athirady Tamil News

பிரித்தானியாவில் கார் ஓட்டும் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்! மீறினால் கடுமையான அபராதம்..!!

0

பிரித்தானியாவில் கார் ஓட்டும் ஓட்டுனர்கள் கண்ணாடி அணியாமல் கார் ஓட்டினால் சுமார் 2500 பவுண்ட் வரை அபராதம் கட்ட நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

பிரித்தானியாவில் தற்போது கடுமையான வெயில் காலம் என்பதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் கார் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதாவது கார் ஓட்டும் ஓட்டுனர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் உகந்த கண்ணாடியை அணிந்து கார் ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் காரணமாக சாலையில் காரை ஓட்டிச் செல்லும் போது, காரின் முன் பகுதியில் வெயில் படும், அது அப்படியே காரின் கண்ணாடியில் பட்டு அதன் பின் அது கண்ணை வந்து தாக்கும்.

இதனால் நாம் சரியாக எதிரே வரும் வாகனங்கள் மற்றும் சாலையை பார்க்காமல் ஓட்ட நேரிடும். அப்போது விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால், கார் ஓட்டுனர்கள் கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படி அவர்கள் உகந்த கண்ணாடி அணிய தவறினால் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி வந்தவர் என்று கூறி சுமார் 2500 பவுண்ட் வரை அபராதம் சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.

முதலில் பிடிக்கப்படும் இடத்தில் 100 பவுண்ட் செலுத்த நேரிடும் எனவும் அப்படி இல்லையெனில் நீதிமன்றம் வரை சென்றால் அதை விட கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − five =

*