;
Athirady Tamil News

வவுனியா வளாகத்தின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது..!!

0

வவுனியா வாளாகத்தின் மொட்டை அடிப்பு விவகாரத்தில் வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாகத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21 ம் திகதி யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாக மொட்டையடித்து கொண்டமை தொடர்பாக அதே பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கால வரையறையற்ற வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றய தினம் (05) வளாக நிர்வாகத்தினருக்கும் பிரயோக விஞ்ஞான பீட மாணவ பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் வகுப்பு தடை விதிக்கப்பட்ட இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 9 ம் திகதி திங்கள் கிழமை ஆரம்பிக்கபடவுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாக முதல்வர் ரி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பிரகாரம் மொட்டையடிப்பு விடயம் தொடர்பான விசாரணைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 4 =

*