;
Athirady Tamil News

பெண்களின் உடல் முடியை காட்டிய விளம்பரம்! 100 வருடத்தில் இதுவே முதல் முறை..!!

0

அமெரிக்காவின் ரேஸர் நிறுவனமான பில்லி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. ரேஸர் விளம்பத்தில் பெண்களை முடியுடன் காட்டுவது 100 வருடத்தில் இதுவே முதல் முறை என ரேஸர் நிறுவனமான பில்லி கூறியுள்ளது.

வழக்கமான ரேஸர் விளம்பரங்களில் ஏற்கனவே முற்றிலும் மென்மையானதாக இருக்கும் பெண்களின் கால்களே காட்டப்படும். ஆனால் இந்தமுறை பெண்களில் உடலில் உள்ள முடியை காட்டியுள்ளது அதிக வரவேற்பை பெற்று இந்த வீடியோ வைரலாகியுள்ளது

பெண்களுக்கு, முடியற்ற உடல் இருப்பதாக அனைத்து நிறுவனங்களும் நிறுவமுயலும்போது, இந்த விளம்பரம் உண்மையைப் பிரதிபலிக்கிறது” என பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூலி கூறியுள்ளார்.

உடல் முடி பற்றி இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக சில பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*