;
Athirady Tamil News

ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் சுடும் அதிநவீன லேசர் துப்பாக்கி: சீனாவின் அசாத்திய கண்டுபிடிப்பு..!!

0

ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் எதிரியை சுட்டுப் பொசுக்கும் வகையிலான, அதிநவீன லேசர் துப்பாக்கியை சீனா கண்டுபிடித்துள்ளது.

சீன ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், இந்த லேசர் துப்பாக்கியை வைத்து ஒளிக்கதிர்களின் மூலம் எதிரியை வீழ்த்த முடியும்.

ZKZM-500 என பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி, சுமார் 3 கிலோ எடை கொண்டது. இதன் மூலம் 800 மீற்றர் தூரத்தில் உள்ள எந்த பொருளையும் எளிதில் சுட்டுப் பொசுக்கி பஸ்பமாக்கி விடலாம்.

இந்த துப்பாக்கியில் உள்ள லேசர் கதிர்கள், இலக்காக இருக்கும் நபர் அணிந்திருக்கும் ஆடைகளை ஒரு வினாடிக்குள்ளாகவே தீப்பற்ற வைக்கும் ஆற்றல் கொண்டது.

தீப்பற்றிய அடுத்த சில நிமிடங்களில் தாக்கப்பட்ட நபரின் தசைகள் கரிக்கட்டையாக பொசுங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த துப்பாக்கியில் சார்ஜ் செய்து கொள்ளும் லித்தியம் பேட்டரி உள்ளது.

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 2 வினாடி இடைவெளியில் சுமார் ஆயிரம் முறை சுட முடியும். இந்த லேசர் துப்பாக்கியால் சுட்டால் ஜன்னல்களையும் கடந்து ஊடுருவும். இதன் மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*