;
Athirady Tamil News

மெர்க்கலை பின்பற்றும் இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி: எதில் தெரியுமா?..!!

0

மேகன் மெர்க்கல் போல பிரபல தொலைக்காட்சி தொடரில் இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி கிரேசிடா போனஸ் நடிக்கிறார்.

இளவரசர் ஹரியும், கிரேசிடா போனஸும் கடந்த 2012-லிருந்து 2014 வரை டேட்டிங் செய்தார்கள்.

பின்னர் இருவரும் காதலிப்பதை நிறுத்தினாலும் நல்ல நண்பர்களாக இன்னும் இருந்து வருகிறார்கள். ஹரி – மெர்க்கல் திருமண நிகழ்வில் கூட கிரேசிடா கலந்து கொண்டார்.

ஹரியின் மனைவி மெர்க்கல் சூட்ஸ் என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகவும் புகழ்பெற்றவராவார்.

இந்நிலையில் மெர்க்கல் வழியை பின்பற்றி பிரபல தொடரில் கிரேசிடாவும் நடிக்கிறார்.

The White House Farm Murders என்னும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகும் தொடரில் பாம்பி என்னும் மொடல் கதாபாத்திரத்தில் கிரேசிடா நடிக்கிறார்.

கிரேசிடா லண்டன் அகாடமி ஆஃப் மியூசிக் அண்ட் டிராமாடிக் ஆர்டி படித்தவர் என்பதும், சில நாடகங்களில் நடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 1 =

*