இறந்தவர்கள் புகைப்படத்தை சாப்பிட சொல்லி கர்ப்பிணிக்கு கொடுமை: காதலன் வெறிச்செயல்..!!

பிரித்தானியாவில் உயிரிழந்த உறவினர்களின் புகைப்படங்களை சாப்பிட சொல்லி காதலியை, காதலன் அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
கிரெக் தாமஸ் என்ற நபரும் சரோலேட் ரூக்ஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சரோலேட் கர்ப்பமானார்.
காதலர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2013-ல் சரோலேட்டை, ரூக்ஸ் அடித்து கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.
மேலும், உயிரிழந்த உறவினர்களின் புகைப்படங்களை சாப்பிட சொல்லி சைக்கோத்தனமாக சரோலேட்டிடம் நடந்துள்ளார்.
இந்த கொடுமையால் உடல் முழுவதும் படுகாயமடைந்த சரோலேட் சில மாதங்கள் கழித்து வீட்டிலிருந்து தப்பி பொலிசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ரூக்ஸை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அவருக்கு கடந்த 2013-ல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சில மாதங்கள் சரோலேட் கொடுமையை அனுபவித்த போது அவரை பொலிசார் முன்னரே காப்பாற்ற வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது ரூக்ஸின் கொடுமையால், சரோலேட் தினமும் கதறி அழுதுள்ளார், இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
பொலிசார் ரூக்ஸ் வீட்டுக்கு வந்த போது, நாங்கள் விளையாட்டாக கத்தி விளையாடுவோம், குழந்தை அழுகிறது என பல காரணங்கள் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பொலிசார் அவரை கைது செய்யாமல் இருந்துள்ளனர்.
இதன் பின்னரும் சில தடவை பொலிஸ் பிடியிலிருந்து ரூக்ஸ் சாமர்த்தியாக தப்பியுள்ளார்.
இதன்பின்னரே தனது சொந்த முயற்சியில் தப்பித்த சரோலேட் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.