;
Athirady Tamil News

நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட குழந்தையின் உயிர்: அதிர்ச்சி வீடியோ..!!

0

சமூகவலைத்தளங்களில் நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி நெஞ்சை பதற வைக்கின்றன.அந்த வீடியோவில், கட்டுப்பாடின்றி நகரும் தள்ளுவண்டி ஒன்று திடீரென சாலையில் இறங்குகிறது.

அந்நேரத்தில் சாலையில் வரும் காரின் ஓட்டுநர் சமயோகிதமாக காரை நிறுத்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது, இந்தக் காட்சி காரிலுள்ள டேஷ்கேமில் பதிவாகியுள்ளது

அந்தக் காரை ஓட்டிய Rebecca Moran கூறுகையில், அந்த சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் அழுது கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

நான் அந்த குழந்தையை பார்க்காமலிருந்திருந்தாலோ, அல்லது எனது காரின் பிரேக்குகள் இயங்காமல் இருந்திருந்தாலோ அல்லது எனக்கு பின்னே வந்த கார் என் கார் மீது மோதியிருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என துடிதுடித்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.இச்சம்பவம் எப்போது, எந்த நாட்டில் நடந்தது என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 15 =

*