;
Athirady Tamil News

சிக்கிம்- திபெத்தை இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறப்பு..!!

0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் நடந்தபோது ‘நது லா’ என்ற பாலம் மூடப்பட்டது. இந்த பாலம் சிக்கிம்- திபெத்தை இணைக்கும் முக்கிய காரணியாக செயல்பட்டது. அதன்பின் 44 ஆண்டுகள் கழித்து 2006-ம் ஆண்டு இதே தேதியில் திறக்கப்பட்டது.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* 1189- முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டார்.

* 1483 – 3-ம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டார்.

* 1785 – டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

* 1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

* 1885 – பிரெஞ்சு விஞ்ஞானி லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடித்த 9 வயது சிறுவன் உடலில் செலுத்தி வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

* 1892 – தாதாபாய் நௌரோஜி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1939 – ஜெர்மனியில் இருந்த யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

* 1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

* 1962 – இலங்கைப் பிரதமர் பண்டார நாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற புத்த துறவி தூக்கிலிடப்பட்டார்.

* 1964 – மலாவி பிரிட்டனிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. அதன்பின் 1966-ல் டியரசாகியது.

* 1975 – கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 2005 – லண்டன் நகரம் 2012-ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − three =

*