;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு..!!

0

ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தி பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஓபநாயக மிதல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + one =

*