;
Athirady Tamil News

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்..!!

0

பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் பிரிவு மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இண்சாப் கட்சியும் போட்டியிடுகின்றன.

மேலும் பெனாசிர் மகன் பிலால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தேர்தல் களத்தில் நிற்கிறது. பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் வெற்றி பெற போவது யார் என்று தேர்தலுக்கு முன்பு மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன.

அதில் கராச்சியை சேர்ந்த பல்ஸ் கன்சல்டன்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இண்சாப் கட்சிக்கு 30 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இவரது எதிரி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) கட்சிக்கு 27 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 17 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காலப் பாகிஸ்தான்’ என்ற நிறுவனம் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் இன்ரான்கான் கட்சி25 சதவீதம் வாக்குகள் பெற்று 2-வது இடத்துக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பாகிஸ்தான் அரசியலில் இருந்து நவாஸ் செரீப் வெளியேற்றப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பிற கட்சிகளில் இருந்து விலகி 92 அரசியல்வாதிகள் இம்ரான்கான் கட்சியில் இணைந்துள்ளனர்.

இது அவரது கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என அரசியல் நிபுணர் மைக்கேல் குகெல்மேன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*