;
Athirady Tamil News

அனைத்து அதிகாரமும் தலைமை நீதிபதிக்கே- சாந்தி பூஷன் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

0

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் வழக்குகளை நீதிபதிகளுக்கு பிரித்து வழங்கும் பணியை தலைமை நீதிபதி மேற்கொண்டு வருகிறார். இந்த நடைமுறையை எதிர்த்து முன்னாள் சட்ட மந்திரி சாந்தி பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தில் உதவுமாறு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை கேட்டிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் ஆஜரான அவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்குவதற்கு தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனக் கூறினார். இந்த விவகாரத்தில் பலர் ஈடுபட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. வாதப்பிரதிவாதங்கள் ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நிறுத்திவைத்தனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உள்ளது என தெரிவித்தனர்.

‘உச்ச நீதிமன்றத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதிதான். எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்வார். இந்த முறை தொடரும். வழக்குகளுக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 19 =

*