;
Athirady Tamil News

தன்னுடைய பராமரிப்பாளரை தாக்கிய நபரிடமிருந்து காப்பாற்றிய யானை: வெளியான நெகிழ்ச்சி வீடியோ..!!

0

தாய்லாந்து நாட்டில் தன்னுடைய பராமளிப்பாளரை காப்பாற்றுவதற்காக யானை பாசத்தில் ஓடிவந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் Chiang Mai மாகாணத்தில் யானை பராமரிப்பாளரும் மற்றொருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது திடீரென்று அந்த நபர் யானை பராமரிப்பாளை கீழே தள்ளி உதைப்பது போல் நடிக்கிறார். உடனடியாக அந்த 17 வயது யானை பராமரிப்பாளரை காப்பாற்றுவதற்காக ஓடி வருகிறது

இதைக் கண்டவுடன் அந்த நபர் ஓடிவிடுகிறார். அதன் பின் யானை பராமரிப்பாளரை ஒரு பாதுகாப்பு வளையம் போல் சுற்றி வருகிறது.

அதைத் தொடர்ந்து தன்னுடைய தும்பிக்கையால் அவரின் தலையை தடவிக் கொடுக்கிறது. இந்த சம்பவம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்தது என கூறப்படுகிறது

இது தொடர்பான வீடியோவைக் கண்ட இணையவாசிகள் தங்கள் நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு பின்லாந்து ஆய்வாளர்கள் யானைகள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் யானைகள் இனிமையானவை, நேசமானவை எனவும் அதுவும் மனிதர்களைப் போன்று இருக்க முடியும் என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 8 =

*