;
Athirady Tamil News

எட்டு குழந்தைகளைக் கொன்ற பெண் மருத்துவ ஊழியர் கைது: அதிர்ச்சி தகவல்..!!

0

பிரித்தானியாவிலுள்ள Countess of chester மருத்துவமனையில் எட்டு குழந்தைகளைக் கொன்றதாக பெண் மருத்துவ ஊழியர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்தனர்.

Countess of chester மருத்துவமனையில் மார்ச் 2015 முதல் ஜூலை 2016 வரை கைக்குழந்தைகள் பிரிவில் 17 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

இது தவிர ஆறு குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன, ஆனால் உயிரிழக்கவில்லை. இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் ஒரு பெண் மருத்துவ ஊழியரைக் கைது செய்துள்ளனர்.

பல மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் ஏராளமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பவங்களுடன் தொடர்புடைய மருத்துவ ஊழியர் ஒருவரை இன்று பொலிசார் கைது செய்தனர்

அந்த பெண் எட்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்காகவும் மேலும் ஆறு குழந்தைகளைக் கொலை செய்ய முயற்சித்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் இது ஒரு முக்கியமான படி என்று தெரிவித்த பொலிசார், தொடர்ந்து விஸ்தாரணமான ஒரு விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் யார் என்றோ அவர் மருத்துவரா, நர்ஸா என்பது போன்ற எந்த விவரங்களையும் தற்போது வெளியிட இயலாத நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eighteen =

*