;
Athirady Tamil News

கைவிட்ட தாய், ஆதரித்த மனிதர்கள்: குட்டி சிம்பன்ஸியின் நெகிழ்ச்சி செயல்..!!

0

நிமோனியா நோயுடன் பிறந்த Limbani என்னும் சிம்பன்ஸியை அதன் தாய் சிம்பன்ஸி ஒதுக்கிவிட்ட நிலையில் அதனை ஒரு கணவனும் மனைவியும் எடுத்து வளர்த்தனர். தற்போது Limbani மியாமியிலுள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில் வளர்ந்து வளர்கிறது.

அதனை எடுத்து வளர்த்தவர்களான Jorgeம் அவரது மனைவியான Taniaம் அவ்வப்போது வந்து Limbaniயை பார்த்துச் செல்வதுண்டு.

அப்படி வரும்போது ஒரு முறை Limbani தனது வளர்ப்புப் பெற்றோரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து தன் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

Limbani ஸ்ட்ரா உதவியுடன் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கிறது. தற்செயலாக அது திரும்பிப் பார்க்க அதை வளர்த்தவரான Jorge வருவதை அது கவனிக்கிறது.

உடனே துள்ளிக் குதித்து உற்சாகக் குரலெழுப்பியபடி ஒரு குழந்தை போல் Jorgeஐ இறுகக் கட்டிக் கொள்கிறது. அதன் பிறகு அது Taniaவை பார்க்கிறது.

உடனே அவரிடம் பாய்ந்து அவரை கட்டிக் கொள்கிறது. Limbani அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம் ஒரு குழந்தை தன் பெற்றோரைக் காணும்போது நடந்து கொள்வது போலவே உள்ளது.

தன்னை வளர்த்தவர்களை மறக்காமல் அவர்களைக் கண்டதும் தன் அன்பை Limbani வெளிகாட்டும் அந்த வீடியோ காண்போரை நெகிழச் செய்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 10 =

*