;
Athirady Tamil News

பாலியல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய மகள்: காப்பாற்ற களமிறங்கிய தாய்..!!

0

அமெரிக்காவின் Milwaukee பகுதியில் ஆண் நண்பரைத் தேடிப் போய் பாலியல் தொழிலுக்காக பெண்களைக் கடத்தும் கும்பலிடம் சிக்கிக் கொண்ட தனது மகளை ஒரு தாய் தானே களமிறங்கி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Milwaukee பகுதியைச் சேர்ந்த 16 வயதுப் பெண் Armoni Chambers, தனது ஆண் நண்பர் என்று எண்ணிய ஒரு மனிதனைக் காணச் செல்வதாக எண்ணிச் சென்று பாலியல் தொழிலுக்காக பெண்களைக் கடத்தும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

பொலிஸ் ஒரு பக்கம் தேட அதில் திருப்தியடையாத Armoniயின் தாய் Bonnie Bruno, தனது மகளைக் கண்டுபிடிக்க பேஸ்புக் உதவியுடன் களமிறங்கினார்

இதற்கிடையில் Armoni தொடர்பான கொடூர வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியது. அவளை ஒரு நாய் போல் கழுத்தில் கட்டி ஒருவன் இழுத்து செல்லும் காட்சி உட்பட அவளைக் கொடுமைப்படுத்தும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

சமூக ஆர்வலர் ஒருவர் உதவியுடன் தேடல் நடவடிக்கையில் இறங்கிய Bonnieக்கு அவரது மகள் சிகாகோவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

Tory Lowe என்னும் சமூக ஆர்வலருடன் இணைந்து Bonnie, பேஸ்புக் லைவ் உதவியுடன் Armoniயைத் தேட பல சமூக ஆர்வலர்கள் உடன் களமிறங்கினர்

கடைசியாக அவள் இருக்கும் இடம் தெரிந்ததும் பொலிசார் உதவியுடன் Armoni மீட்கப்பட்டாள். அவள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வரும் நிலையில் பொலிசார் வீடியோவை எடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bonnie பிற தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + two =

*