;
Athirady Tamil News

இயற்கைக்கு மாறாக பாம்பை கொன்ற எலி : ஆச்சர்ய வீடியோ..!!

0

வழக்கமாக பாம்பு எலியை சாப்பிடும். ஆனால் எலி ஒன்று பாம்பை சாப்பிட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

காங்டாங் மாகாணத்தில் உள்ள புனிங் என்னும் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.முதலில் இந்த சம்பவத்தை பார்த்த கிராமத்தார் அதிர்ந்து போயிருக்கின்றனர். அதன்பின்னர் அதனை விடியோவும் எடுத்துள்ளனர்

பாம்பு ஒன்று பல காயங்களுடன் எலியோடு போராடி கொண்டிருந்தது. வெகு நேரமாக பாம்பை பல இடங்களில் கடித்த எலி ஒரு கட்டத்திற்கு மேல் பாம்பின் வாயை கவ்வியபடி புதருக்குள் இழுத்து சென்றது

அந்த பாம்பு விஷத்தன்மை உடையதா என்பது குறித்து அறியமுடியவில்லை என்கின்றனர் கிராமத்தினர்.

பல கோடி ஆண்டுகளாக நடந்து வந்த ஆளுமை கொடுமைகள் இப்போது இயற்கையாகவே தலைகீழாக மாற தொடங்கியிருக்கின்றன என்றுதான் சொல்ல தோன்றுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + fifteen =

*