;
Athirady Tamil News

குளியலறையை அதிக நேரம் பயன்படுத்திய தங்கை! 50 முறை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்..!!

0

ஜார்ஜியாவில் தனது தங்கை அதிக நேரம் குளியலறையை பயன்படுத்திய காரணத்தால் கோபம் கொண்ட அண்ணன் 50 முறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.

Gavin Henderson (27) என்ற நபர் தனது இரண்டு தங்ககைகள் மற்றும் தனது தாயுடன் கடந்த ஆண்டு புதுகுடியிருப்பு ஒன்றில் குடியேறியுள்ளார்.

அங்கு குடியேறிய நாள் முதல், Keaira Henderson என்ற 15 வயது சகோதரி, குளியலறையை பயன்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, Gavin க்கு அதிகாலை 3 மணிக்கு குளியலறை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு அனுமதிக்காத தங்கை வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் கோபம் கொண்ட Gavin, சமையலறையில் இருந்த சிறிய கத்தியை எடுத்து குத்தியுள்ளார், இதில் சரமாரியாக 50 முறை குத்தியதில், தங்கை ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதனைப்பார்த்த மற்றொரு தங்கை, வேலைக்கு சென்றிருந்த தனது தாய்க்கு போன் செய்து உடனடியாக வரசொல்லியுள்ளார். விரைந்து வந்த தாய் 911க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி Keaira உயிரிழந்தார். இதுதொடர்பாக Gavin கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவரது தாய் இது ஒரு விபத்து என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாத காணத்தால் இவருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 4 =

*