;
Athirady Tamil News

திடீரென்று பெய்த ரத்த மழை: இறுதி நாட்களின் அறிகுறியா?..!!

0

ரஷ்யாவில் திடீரென்று பெய்த ரத்த மழையால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சைபீரியாவில் உள்ள ஆர்டிக் பகுதியிலேயே இந்த சிவப்பு வண்ண மழை பெய்துள்ளது. உள்ளூர் மக்கள் இதை பைபில் காலத்துடன் ஒப்பிட்டு இறுதி நாட்கள் நெருங்கியதற்கான அறிகுறியாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

Norilsk பகுதியில் அமைந்துள்ள ரசாயன ஆலையின் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களும் ரத்த மழையால் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.

ஆனால் சிலர் அதிகரித்துவரும் ரசாயன ஆலைக்கழிவுகளால் தான் சிவப்பு மழை பெய்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே Nornickel ரசாயன ஆலையில் உரிமையாளர் தங்களின் ஆலையில் இருந்து எந்தவித நச்சும் வெளியேறுவதில்லை எனவும், பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் எந்த நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபடுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் திடீரென்று பெய்த சிவப்பு மழைக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் கொலம்பியாவை தோற்கடித்த இங்கிலாந்தின் ஜெர்ஸி நிறம் இதுவென கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + one =

*