;
Athirady Tamil News

தற்கொலை செய்து காதலை நிரூபி! உத்தரவிட்ட பெண்ணின் தந்தை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

0

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் தமது காதலை நிரூபிக்க சொன்ன பெண்ணின் தந்தை முன்பு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போபாலின் அரேரா மண்டல் பகுதியில் அமைந்துள்ளது குறித்த இளம்பெண்ணின் குடியிருப்பு.

நேற்று பெண்ணின் தந்தை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் அதுல் Lokhande என்ற அந்த இளைஞர் இரவு 9.30 மணியளவில் பெண்ணின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

பெண்ணின் குடியிருப்புக்கு வெளியே துணைக்கு சென்ற தாய்மாமனை காருக்குள் அமர்த்திவிட்டு அந்த இளைஞர் மட்டுமே பெண்ணின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தங்களது காதலை தற்கொலை செய்து நிரூபிக்க வேண்டும் எனவும்,பிழைத்தால் தமது மகளுடன் திருமணம் செய்து வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதுல் Lokhande தலையில் சுட்டுள்ளார்.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார் அவரது தாய்மாமன்.வங்கி ஊழியரான குறித்த இளம்பெண்ணை அதுல் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து வைக்கும்படி பெண்ணின் தந்தையிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்து காதலை நிரூபிக்க கோரியுள்ளார்.

இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் அதுல் பதிவு செய்திருந்தது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறித்த பதிவுடன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட சுமார் 40 புகைப்படங்களையும் அதுல் இணைத்திருந்தார்.இந்த விவகாரத்திற்கு பின்னர் குறித்த பெண்ணின் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + nineteen =

*