;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா பதவியேற்றார்..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட வாத்தியத்துடன் புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.
தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபர் உரையாற்றியிருந்தன் பின்னர் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்
இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் முன்பு பணியாற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 6 =

*