;
Athirady Tamil News

பெற்ற மகனையே சுட்டுக் கொன்ற 92 வயது அம்மா: காரணம் என்ன?..!! (VIDEO)

0

முதியோர் இல்லத்திற்கு தன்னை அனுப்ப முடிவு செய்திருந்த மகனை துப்பாக்கியால்சுட்டுக் கொன்றார் 92 வயது அமெரிக்க பெண் ஒருவர்.

அரிசோனாவைச் சேர்ந்த Anna Mae Blessing என்னும் அந்தப் பெண் இரண்டு துப்பாக்கிகளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது குறித்த தனது மகனின் திட்டம் குறித்து பல நாட்களகவே ஆழ்ந்த யோசனையில் இருந்திருக்கிறார் Anna.

இரண்டு துப்பாக்கிகளை வாங்கி தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த Anna, படுக்கையறையில் வைத்து அவரது மகனை சுட்டார்

பொலிஸ் விசாரணையின்போது, தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து பல முறை சுட்டு தனது மகனைக் கொன்றதாக Anna தெரிவித்தார்

அதோடு நிற்காமல் துப்பாக்கியால் தனது மகனின் தோழியையும் கொல்ல முயன்றதாகவும், அவர் Annaவுடன் சண்டையிட்டு அந்த இரண்டு துப்பாக்கிகளையும் பிடுங்கியதோடு பொலிசாருக்கு தகவலும் அளித்தார்

Anna மீது கொலை, பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் நடத்துதல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + eighteen =

*