;
Athirady Tamil News

வவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..!! (படங்கள்)

0

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானீச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாக இவ் விழிப்புணர்வு பேரணியானது மன்னார் வீதியுடாக பட்டானீச்சூர் 5ம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியுடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியுடாக பாடசாலையை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மது போதையில் வாகனத்தை செலுத்தி உங்களது உயிரையும் அப்பாவி மக்களின் உயிரையும் பலி கொடுக்காதீர், அம்மா!அப்பா எனக்கு தலைகவசம் அணிவித்து எனது உயிரையும் எனது எதிர்காலத்தையும் பாதுகாக்கவும், போதைப்பொருளற்ற நாட்டை கட்டி எழுப்புவோம், போதைப் பொருட்களை முற்றாக தடை செய்வோம் போன்ற பதாதைகளை தாங்கிச் சென்றனர்.

இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*