;
Athirady Tamil News

உருகுவேயின் தடுப்பாட்டம்…. பிரான்ஸ்க்கு திண்டாட்டம்…. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!!

0

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் வலுவான, இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஆட்டத்துடன் காலிறுதி போட்டிகள் துவங்க உள்ளன. இதில் மிகவும் வலுவான உருகுவேயின் தடுப்பாட்டத்தை தகர்த்து பிரான்ஸ் வெற்றி பெறுமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. ஸ்கோர் ஃபிபா உலகக் கோப்பை 2018 – UPCOMING உருகுவே URU – FRAபிரான்ஸ் Date : Jul 06 2018, Fri – 19:30 PM (IST)Venue : Nizhny Novgorod Stadium மேலும் பார்க்க 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன. உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. இன்று நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் உருகுவே – பிரான்ஸ், பிரேசில் – பெல்ஜியம் மோதுகின்றன. நாளை நடக்கும் ஆட்டங்களில் ரஷ்யா – குரேஷியா, ஸ்வீடன் – இங்கிலாந்து சந்திக்கின்றன.

பிரான்ஸ் கடந்த வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. 5வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

உருகுவே கடந்து வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே, லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. எகிப்தை 1-0, சவுதி அரேபியாவை 1-0, ரஷ்யாவை 3-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை 2-1 என்று வென்றது. 13வது உலகக் கோப்பையில் விளையாடும் போர்ச்சுகல், 1930ல் நடந்த முதல் உலகக் கோப்பையை வென்றது. 1950ல் மீண்டும் கோப்பையை வென்றது.

கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி நுழைந்து 4வது இடத்தைப் பிடித்தது. அசத்தும் உருகுவே இந்த உலகக் கோப்பையில் இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணியாக உருகுவே உள்ளது. பிரான்ஸ் தோல்வியடையவில்லை என்றாலும், ஒரு ஆட்டத்தில் டிரா செய்தது. மிகவும் வலுவான தடுப்பாட்டம் என்ற மிகப் பெரிய பலத்துடன் உருகுவே உள்ளது. கேப்டன் டியாஜோ கோடின், ஜோஸ் ஜிமனெஸ், மார்டின் காசரெஸ், டியாஜோ லக்சால்ட், கோல் கீப்பர் பெர்னான்டோ முஸ்லீரா போன்ற மிகப் பெரிய அரணை தகர்ப்பது என்பது பிரான்ஸ் அணிக்கு சாதாரணமான விஷயமில்லை.

கடும் சவால் காத்திருக்கிறது. இரண்டாவது பீலேவாக உருவெடுத்துள்ளார் பிரான்ஸின் 19 வயதாகும் மாப்பே. அர்ஜென்டினாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்து கலக்கினார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் எதிரணிக்கு கோலடிக்க ஒரு வாய்ப்பை மட்டுமே உருகுவே தந்துள்ளது. உருகுவேவுக்கு எதிராக எதிராக இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் கடைசியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 10 =

*