;
Athirady Tamil News

மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி முரசுமோட்டை றோ. க வித்தியாலயத்தில் யாழ் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் கவணயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று (06-07-2018) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மேற்படி கவனயீர்ப்புபோராட்டமானது முரசுமோட்டை றோ. க வித்தியாலயத்தில் ஆரமாகி பரந்தன் முல்லை வீதியூடாக முரசுமோட்டை இரண்டாம் கட்டாய சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேட்கொண்டார்கள்

அமெரிக்கன் மிசன் திருச்சபை கோரக்கன் கட்டு பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 18 =

*