;
Athirady Tamil News

ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்குப் பதில்..!!

0

சிறையில் உள்ள தாயற்ற இரண்டு குழந்தைகளின் தந்தை ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடபுலத்துக் கல்விச் சமூகம் சார்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு ஊடாக கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் கையளித்த மூன்று லட்சம் கையொப்பங்கள் அடங்கிய மகஜருக்கு ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைத்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு…

தாயை இழந்து பரிதவித்து நிற்கும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி கௌரவ ஜனாதிபதியிடம் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இட்ட மூன்று லட்சம் கையொப்பங்களை ஒப்படைத்து மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலைசெய்யக் கோரியிருந்தோம்.

அம்மனுவைப் பரிசீலித்த ஜனாதிபதி, ஆனந்தசுதாகரனின் விடுதலையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அதேவேளை சட்டரீதியிலான அணுகுமுறையின் அடிப்படையில் அவரது விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமையை சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடித்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் தாயற்ற இரண்டு குழந்தைகளின் பரிதாப நிலையை உணர்ந்து கௌரவ ஜனாதிபதி ஆனந்தசுதாகரனை விரைவில் விடுதலை செய்யவேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதே வேளை நாட்டின் அதியுயர் கட்டளையிடும் நிலையில் உள்ள கௌரவ ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக சிரத்தையுடன் தொழிற்பட்டு பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலையைப் போக்க வேண்டும். என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 20 =

*