;
Athirady Tamil News

உடுவில் பிரதேச செயலக பண்பாட்டுப்பெருவிழா..!! (படங்கள்)

0

உடுவில் பிரதேச செயலக பண்பாட்டுப்பெருவிழா- வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

உடுவில் பிரதேச செயலக கலாசாரப்பேரவையும், உடுவில் பிரதேச செயலகமும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய பண்பாட்டுப்பெருவிழா இன்று 06.07.2018 வெள்ளிக்கிழமை மாலை 02 மணியளவில் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் உடுவில் பிரதேச செயலர் சி.ஜெயகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி.அபிராமி பாலமுரளி, யாழ்.மாவட்டக்கலாச்சார உத்தியோகத்தர் மா.அருள்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள், மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன், கலைநிலம் நூல் வெளியீடு என்பன இடம்பெற்றன. புத்தகத்தை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வெளியிட்டு வைக்க, வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பெற்றுக்கொண்டார்.

விருந்தினர்களுடன் கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 2 =

*